/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார், மேட்டூரில் நள்ளிரவில் கனமழை
/
ஆத்துார், மேட்டூரில் நள்ளிரவில் கனமழை
ADDED : அக் 05, 2025 01:17 AM
ஆத்துார், ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு கன மழை பெய்தது. இது ஆத்துாரில், 46.2 மி.மீ., மழையாக பதிவானது. இந்த மழையால், தேசிய, மாநில மற்றும் கிராம சாலைகளில், மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது. குறிப்பாக நரசிங்கபுரம் சந்தை திடல் மற்றும் பழனியாபுரி சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். தண்ணீரை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
8 நாளில் 182 மி.மீ.,
மேட்டூர், அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் கடந்த மாதம், 6ல், 13.6 மி.மீ., 10ல், 51.4; 14ல், 1.2; 17ல், 16.6; 18ல், 44.4; 19ல், 38.8; 22ல், 13.2; 28ல், 3.2 என, 8 நாட்களில், 182.4 மி.மீ., மழை பெய்தது. இதனால் கொளத்துார், மேச்சேரி ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, விவசாயிகள் நிலங்களை உழுது மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல் நேற்று அதிகாலை வரை, மேட்டூரில், 21 மி.மீ., மழை பெய்தது.