ADDED : ஜூன் 03, 2026 02:52 AM

அ நிறம் | அளவு
ஆத்துார்:ஆத்துார், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், 1:00 மணியளவில், கன மழை பெய்தது.
2:00 மணி வரை பெய்த மழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மாலை, 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை கன மழையாக பெய்தது. இந்த மழையின் காரணமாக, ஆத்துார் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் கரைபுரண்டு ஒடியது.* கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழையாக கொட்டி தீர்த்தது.
