ADDED : ஏப் 20, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி:வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. பின் வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், பனைமடல், தும்பல், நீர்முள்ளிக்குட்டை, மேட்டுப்பட்டி, பழனியாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து, மதியம், 2:30 முதல் மாலை, 4:30 மணி வரை இடைவிடாமல் கன மழை பெய்தது.
இதனால் நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில நாட்களாக தொடர் மழையால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

