/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணியர் ரசிப்பு
/
ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணியர் ரசிப்பு
ADDED : டிச 27, 2024 07:37 AM
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று அதிகாலை முதல், சாரல் மழை பெய்தது. இது படிப்படியாக அதிகரித்தது. தொடர்ந்து பெய்த மழையால், உள்ளூர் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கினர். அதேநேரம் சுற்றுலா பயணியர் மழையில் நனைந்தபடி ஏற்காட்டை சுற்றி பார்த்தனர்.
பூங்காக்களுக்கு சென்று விளையாடி மகிழ்ந்தனர். படகு இல்லத்திலும், மழையில் நனைந்தபடி மோட்டார், துடுப்பு மட்டுமின்றி, பெடல் படகுகளிலும் சவாரி செய்து மகிழ்ந்தனர். மதியத்துக்கு மேல் மழை அதிகரித்து பனிமூட்டம் சூழ்ந்ததால், பெடல் படகு இயக்கத்தை, படகு இல்லநிர்வாகம் நிறுத்தியது. இதனால் சுற்றுலா பயணிகள், மோட்டார் படகில் சவாரி செய்தனர். மேலும் மழை, பனிமூட்டத்தால் கடுங்குளிர் நிலவியது. இதனால் சாலையோர கடைகளில் பஜ்ஜி, போண்டா, சூடான ஸ்வீட் கார்ன் வியாபாரம் அமோகமாக நடந்தது.
சேலத்திலும் பெய்தது
சேலம் மாநகரிலும் நேற்று காலை முதல், மேகமூட்டம் காணப்பட்டது. வெயில் வராத நிலையில், அவ்வப்போது சாரல் மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்தது. மாலை வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்ததோடு, குளிர் காற்று வீசியது.