ADDED : மே 07, 2026 02:35 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு: ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் வானம் மேக-மூட்டமாக காணப்பட்டது.
காலை, 10:00 மணிக்கு மேல், வெயில் தாக்கம் காணப்பட்டது. தொடர்ந்து இரவு, 8:25 முதல், ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் ஏற்காடு, 'குளுகுளு' என மாறியுள்ளது. அதேபோல் ஏத்-தாப்பூர், வைத்தியகவுண்டன்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் அரை மணி நேரம் மழை பெய்தது.
