தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏற்காட்டில் கனமழை

ஏற்காட்டில் கனமழை

ஏற்காட்டில் கனமழை


ADDED : மே 18, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து காலை, 11:00 முதல், 11:45 மணி வரை, சாரல் மழை பெய்தது. மதியத்துக்கு மேல் வெயில் தென்-பட்டது. ஆனால் இரவு, 7:10 மணிக்கு ஏற்காடு, அதன் சுற்றுப்ப-குதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் பெய்த மழை, அரை மணி நேரம் பெய்தது. இதனால், 'குளு-குளு' சூழல் நிலவியது. மேலும் பனிமூட்டத்தால் வாகன ஓட்-டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.அதேபோல் வாழப்பாடி, முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி, கருமா-புரம், கூட்டாத்துப்பட்டி உள்பட அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இரவும், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்-தது. தவிர சேலம் மாநகரிலும் ஆங்காங்கே மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us