/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாள் முழுதும் கொட்டிய மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
நாள் முழுதும் கொட்டிய மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாள் முழுதும் கொட்டிய மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாள் முழுதும் கொட்டிய மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 13, 2024 08:55 AM

சேலம்: சேலம் மாவட்டம் முழுதும் நேற்று அதிகாலை முதல், இடைவிடாது மழை பெய்தது. மதியம், 12:00 மணிக்கு கூட சூரிய வெளிச்சமின்றி வெண்மேகங்கள் சூழ்ந்தபடி பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்-தது.
சேலத்தை சுற்றியுள்ள கஞ்சமலை, ஏற்காடு, ஜருகுமலை உள்ளிட்ட அனைத்து மலை முகடுக-ளிலும், பஞ்சு போன்ற வெண் மேகங்கள் தழுவிச்-சென்றன. கஞ்சமலையில் உள்ள மயில்கள் நனைந்து, இறக்கைகளை விரிக்க முடியாமல், திருமணிமுத்தாற்றின் கரையில் சூரிய வெப்பத்-துக்கு காத்திருந்தன. நெடுஞ்சாலைகளில் புகை படர்ந்தாற்போன்று பனி மூட்டம் காணப்பட்-டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இடை-விடாது பெய்த மழையால், கிராமப்புறங்களில் விவசாய பணி செய்ய முடியாதபடி தாழ்வான வயல்களில் மழைநீர் தேங்கியது. ஆத்துார், நர-சிங்கபுரம், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனுார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதி-காலை முதலே மழை பெய்தது. இதனால் மக்கள், சாலை, தெருக்களில் நடந்து கூட செல்ல முடி-யாமல் அவதிக்குள்ளாகினர். இடைவிடாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்-கப்பட்டது.
அதேபோல் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பா-ளையம், அயோத்தியாப்பட்டணம், கருமந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடைவி-டாமல் பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பனிமூட்டம்
ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுதும், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதலே, பனி மூட்டத்துடன் மழை பெய்தது. இதனால் செங்காடு பிரிவு சாலை அருகே மின்கம்பம் சேதம் அடைந்து, அதன் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. உடனே மின்சாரம் துண்-டிக்கப்பட்டது. பின் மின்வாரிய ஊழியர்கள், மழையில் நனைந்தபடியே சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேறு பாதை வழியே மின்சாரம் கொடுக்கப்பட்டு, மலை கிராமங்க-ளுக்கு செல்லும் மின் வினியோகத்தை சரி செய்-தனர். மேலும் மலை கிராம சாலையில் செல்லும் மக்கள் கவனமாக செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். தவிர பனிமூட்டத்துடன் கூடிய மழையால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்-பட்டுள்ளது. மேலும் கடுங்குளிரால் மக்கள் சிர-மத்துக்கு ஆளாகினர்.
பள்ளிக்கு விடுமுறை; தேர்வு ஒத்திவைப்பு
சேலம் மாவட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரை-யாண்டு தேர்வு, கடந்த, 9, 10ல் தொடங்கி நடந்து வந்தது. நேற்று மழையால், 'பள்ளிகளுக்கு விடு-முறை' என, மாவட்ட நிர்வாகத்தால், காலை, 7:47 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகு-றித்து மாணவர்களுக்கு அறிவிக்கவும், ஆசிரியர்-களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக மாணவ, மாணவியருக்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, 'இன்று(நேற்று) நடக்க-விருந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்-கப்படும். ஏற்கனவே திட்டமிட்டபடி பிற தேர்-வுகள் நடக்கும் என்ற தகவலை தெரிவிக்க அறிவு-றுத்தப்பட்டது. அதன்படி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்களுக்கு தெரிவித்தனர்.