தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இடி, மின்னலுடன் கனமழை

இடி, மின்னலுடன் கனமழை

இடி, மின்னலுடன் கனமழை


ADDED : மார் 19, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏற்காடு: ஏற்காட்டில் கடந்த இரு மாதங்களாக வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் நேற்று முன்தினம், சில மலை கிராமங்களில் மட்டும் கனமழை பெய்தது. இருந்தபோதும் ஏற்காடு டவுனில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று இரவு, 8:20 மணிக்கு ஏற்காடு டவுன் பகுதி, அதன் அருகே உள்ள மலை கிரா-மங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேல் கொட்டி தீர்த்தது.

அதேபோல் கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக வெயில் தாக்கம் இருந்த நிலையில், நேற்று மாலை, 6:00 மணிக்கு கெங்கவல்லி, ஆணையாம்பட்டி, தெடாவூர், வீர-கனுார், தம்மம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து விவசா-யிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தாரமங்கலம், அதன் சுற்றுப்பகுதி-யிலும் நேற்று இரவு, 7:50 மணிக்கு மழை பெய்ய தொடங்கி, அரை மணி நேரத்துக்கு மேல் கொட்டியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us