/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் கொட்டித்தீர்த்த கனமழை ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி
/
ஏற்காட்டில் கொட்டித்தீர்த்த கனமழை ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி
ஏற்காட்டில் கொட்டித்தீர்த்த கனமழை ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி
ஏற்காட்டில் கொட்டித்தீர்த்த கனமழை ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 15, 2025 02:07 AM
ஏற்காடு, ஏற்காட்டில் நேற்று காலை, 11:00 மணி வரை, வெயில் அடித்த நிலையில், அதற்கு பின் வானம் மேகமூட்டமாக மாறியது. தொடர்ந்து மதியம், 2:50 மணிக்கு ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதி முழுதும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, 4:00 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
குறிப்பாக ஒண்டிக்கடை, சந்தைப்பேட்டை வணிக வளாகத்தை ஒட்டியுள்ள சேலம் செல்லும் சாலை ஓரம், நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால், சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. மழை நின்று, ஒரு மணி நேரத்துக்கு மேலும் மழைநீர் வடியாததால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு இடையே சென்றனர். மேலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால், பாதசாரிகள் அவதிப்பட்டனர்.
மழைநீர் வடிகாலில், மழைநீர் செல்ல, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.