ADDED : மே 08, 2025 01:13 AM
சேலம், சேலம் மாநகர போலீஸ், 'ட்ரு ஹோம்' தொண்டு நிறுவனம் சார்பில், தொங்கும் பூங்காவில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில் கலெக்டர் பிருந்தாதேவி, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு ஆகியோர், துாய்மை பணியாளர்கள், ஊர்காவல் படையினர் என, 3,000 பேருக்கு ஹெல்மெட் வழங்கினர்.
தொடர்ந்து பிரவீன் குமார் அபினபு பேசுகையில், ''சேலம் மாநகரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில், 144 பேர் இறந்தனர். அனைவரும் ஹெல்மட் அணியாமல் சென்றவர்கள் என்பது வேதனை.
ஆனால் இன்னமும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்கின்றனர். ஹெல்மெட் அணிவது மிக அவசியம்,'' என்றார்.
தொடர்ந்து ஹெல் மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை, கமிஷனர் வாசிக்க அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
தலைமையிட துணை கமிஷனர் கீதா, தெற்கு துணை கமிஷனர் வேல்முருகன், முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், தொண்டு நிறுவன நிர்வாகிகள்
பங்கேற்றனர்.