ADDED : மே 08, 2024 04:46 AM
சேலம் : தமிழக கல்லுாரி கல்வி இயக்ககத்தில் செயல்படும் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளநிலை படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான நிலையில் ஏராளமான மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு செய்ய, சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லுாரி, கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரி ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் உரிய விபரங்களை கொடுத்து, விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம். வரும், 20 வரை விண்ணப்ப பதிவுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 28 முதல் ஜூன், 29 வரை இரு கட்டமாக நடக்க உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூலை, 3 முதல் வகுப்பு தொடங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

