/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காட்சி பொருளாக உயர்கோபுர மின்விளக்கு
/
காட்சி பொருளாக உயர்கோபுர மின்விளக்கு
ADDED : மார் 02, 2026 05:30 AM
பனமரத்துப்பட்டி; சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, நிலவாரப்பட்டியில் சமீபத்தில் மேம்பாலம் கட்டப்-பட்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்-ளது. பாலத்தின் கிழக்கே நிலவாரப்பட்டி பய-ணியர் நிழற்கூடம் அருகே உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்க-ளுக்கு மேலாகியும் விளக்கு எரியவில்லை.
நிலவாரப்பட்டி பஸ் ஸ்டாப், பாலத்தின் அடியி-லுள்ள சாலை, சேலம் - பனமரத்துப்பட்டி பிரிவு வரையான சர்வீஸ் சாலையில் இருள் சூழ்ந்துள்-ளது. இரவில், 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நிழற்கூ-டத்தில் நிற்கவே பயணியர் அஞ்சுகின்றனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'மின் விளக்கு கம்பத்துக்கு தனியே மின் இணைப்பு வாங்க-வில்லை. காட்சிப்பொருளாக உள்ள உயர் கோபுர மின் விளக்கை, எரியவைக்க நெடுஞ் சாலைத்-துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
ஆர்.சி.செட்டிப்பட்டி
சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்
சாலையில், ஓமலுார் ஆர்.சி., செட்டிப்பட்டி மேம்-பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில், உயர்-கோபுர மின் விளக்கு உள்ளது.
அந்த விளக்கு அமைத்தும், 6 மாதங் களுக்கு மேலாகியும் இதுவரை எரியவில்லை. இதுகு-றித்து மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தேசிய நெடுஞ்சாலைத்-துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

