/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.32 லட்சம் மோசடியில் ஹெச்.எம்., தலைமறைவு
/
ரூ.32 லட்சம் மோசடியில் ஹெச்.எம்., தலைமறைவு
ADDED : அக் 15, 2025 01:21 AM
சேலம்:சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில், 2017 முதல், 2022 வரை தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில், 32 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சங்க உறுப்பினர்கள் புகார்படி, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த செப்., 15ல், சங்க செயலர் செல்வம், 57, ஓய்வு பெற்ற செயலர் அசோகன், 70, ஆகியோரை கைது செய்தனர். ஆனால் சங்கத்தலைவர் ரவி, 57, தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
இதுகுறித்து உறுப்பினர்கள் கூறுகையில், 'அயோத்தியாப்பட்டணம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான ரவி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சேலம் மாவட்ட செயலராகவும் உள்ளார். அந்த அதிகாரத்தால் கைதாகாமல் தப்பித்து வருகிறார். அவரது மருத்துவ விடுப்பு முடிந்தும், தகவலின்றி பணிக்கு வராமல் இருக்கிறார்' என்றனர்.
டி.எஸ்.பி., சந்திரசேகரன் கூறுகையில், ''தலைமை ஆசிரியரை தேடி வருகிறோம்,'' என்றார்.