/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் அரிசி பதுக்கல்; புகார் அளிக்க அழைப்பு
/
ரேஷன் அரிசி பதுக்கல்; புகார் அளிக்க அழைப்பு
ADDED : மே 03, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : ரேஷன் அரிசி பதுக்கல், கடத்தல் குறித்து, மக்கள் புகார் அளிக்க, சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர்களது அறிக்கை:தமிழகம் முழுதும் அரிசி கடத்தல், பதுக்கல் தொடர்பான புகார்களை, மக்கள் தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு, 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தவிர சேலம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சங்கீதாவை, 94981 67212 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார், தகவல்களை தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவரின் விபரம் ரகசியம் காக்கப்படும்.