sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

/

வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


ADDED : செப் 23, 2025 01:33 AM

Google News

ADDED : செப் 23, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் :வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில், வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தலைவாசல் அருகில் உள்ள மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் பழனிவேல், 59, ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 2017, ஜூலை 6ம் தேதி மனைவியுடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த, 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி, 32 பவுன் நகை, ரூ,7.20 லட்சம் மற்றும் 2 மொபைல்களை கொள்ளையடித்து சென்றனர்.

தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேனி மாவட்டம், போடி நாயக்கனுாரை சேர்ந்த நல்லதம்பி, 30, என்பவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் தலைமறைவானதால், நல்லதம்பி மீதான வழக்கு தனியே நடந்து வருகிறது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், நல்லதம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us