/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டில் புகுந்து நகை, பணம் திருட்டு
/
வீட்டில் புகுந்து நகை, பணம் திருட்டு
ADDED : நவ 11, 2025 02:03 AM
சேலம், வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
சேலம் டவுன், செரிரோடு திருவள்ளுவர் சிலை பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன், 34. இவர் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மொபைல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தை பூட்டிவிட்டு, மாடியில்
குடும்பத்தினருடன் துாங்கியுள்ளார். நேற்று அதிகாலை கீழே இறங்கி பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த, 3 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது.இதுகுறித்து சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் நள்ளிரவில் 2 மர்மநபர்கள் அப்பகுதிக்கு வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

