ADDED : பிப் 10, 2026 08:55 AM

ஆத்துார்: தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில், ஆத்துார் அருகே வட சென்னிமலையில் உள்ள, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது. மாநில துணைத்தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார். அதில், கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டனர்.
கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது: யு.ஜி.சி., நிர்ணயித்த, 57,800 ரூபாய் ஊதியத்தை வழங்க வேண்டும்; 12 மாத ஊதியம், பி.எப்., - இ.பி.எப்., மற்றும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். மண்டல தலைவர் கண்ணன், கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
