ADDED : நவ 30, 2025 02:18 AM
அ நிறம் | அளவு
சேலம், நதேசிய பள்ளி விளையாட்டு ஆணையம் சார்பில், ஹரியானாவில் பள்ளி மாணவர்களுக்கு, 69வது தேசிய தடகள விளையாட்டு போட்டி நடக்கிறது.
அதில், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள், கம்பு ஊன்றி தாண்டுதல் பிரிவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சேலம் விடுதியில் பயிற்சி பெறும் மாணவர் சஞ்சய்குமார், 4.40 மீ., உயரம் தாண்டி, தங்கம் வென்றார். அதே பிரிவில் சேலம் விடுதி மாணவன் கிர்த்திக்வாசன், வெண்கலம் வென்றார்.
அதே போட்டியின், 19 வயது பெண்கள் பிரிவில், சேலம் விடுதி மாணவி மகாலட்சுமி, வெள்ளி வென்றார். பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், தடகள பயிற்சியாளர் இளம்பரிதி உள்ளிட்டோர்
பாராட்டினர்.
