/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையில் பெரும் பள்ளம்; வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
/
சாலையில் பெரும் பள்ளம்; வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
ADDED : டிச 11, 2024 07:17 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி, சந்தைபேட்டையில் இருந்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துக்கு தார்ச்சாலை செல்கிறது. அது மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ளது. அதில் பனமரத்துப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கனரக டிப்பர் லாரிகள், பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் இயக்கப்படுவதால், மேலும் பள்ளமாகி வருகிறது.
இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். குறிப்பாக இரவில் செல்வோர் விழுவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.