ADDED : மார் 12, 2024 03:57 AM
ஆத்துார்: அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், தமிழகம் முழுவதும் தடையில்லா போதை பொருள் விற்பனை அதிகளவில் உள்ளது. தமிழக அரசு, போதை பொருளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதை பொருட்கள் கடத்துபவர்களுக்கு பாதுகாப்பாக தி.மு.க., அரசு உள்ளது.
தி.மு.க.,வில் இருந்த ஜாபர்சாதிக், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தியதை, மத்திய போதை பொருள் தடுப்பு போலீசார் கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர். எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ்., போதை பொருள் கட்டுப்படுத்த பலமுறை எச்சரிக்கை செய்து வந்தார். இன்று காலை, 10:00 மணியளவில், அரசை கண்டித்து சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகளில், அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., உத்தரவுபடி போராட்டம் நடக்கிறது.
இதில், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஆத்துாரில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். இதில் கட்சியினர், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
