தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உடன்பாட்டால் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

உடன்பாட்டால் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

உடன்பாட்டால் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு


ADDED : ஜன 06, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சி மேயர், கமிஷனர் பேசியதில் உடன்பாடு ஏற்-பட்டதால், பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க வலியுறுத்தி நடந்த காலவரையற்ற உண்ணா

விரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பனமரத்துப்பட்டி ஏரி, 2,465 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சேலம் மக்களின் குடிநீர் தேவைக்கு, 1911ல், ஆங்கிலேயர்கள் ஜருகுமலை அடிவாரத்தில் ஏரியை உருவாக்கினர். சேலத்துக்கு காவிரி குடிந்த வந்த பின், பனமரத்துப்பட்டி ஏரி குடிநீர் திட்டம் கைவிடப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்ட ஏரியில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. ஏரியை சீரமைத்து, மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு வந்து, சுற்றுலா தலமாக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க வலியுறுத்தி, ஜன., 5ல், கால-வரையற்ற போராட்டம் நடைபெறும் என, தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம், பனமரத்துப்பட்டி ஏரி போராட்-டக்குழு அறிவித்து, துண்டு பிரசுரம் வெளியிட்டது. மேலும் பன-மரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால், போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர்.

நேற்று காலை, 10:45 மணிக்கு போலீசாரின் தடையை மீறி தமிழ்-நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சர-வணன் தலைமையில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்-டனர். சேலம் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், போலீஸ் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் சுரேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடர்ந்தது. மாலை, 5:15 மணிக்கு சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் ஆகியோர் பனமரத்துப்-பட்டி வந்து, போராட்ட குழுவினருடன் பேசினர்.ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை, 15 நாட்களுக்குள் அகற்றும் பணி தொடங்கும். அமைச்சர், முதல்வர் ஆகியோரிடம் பேசி, சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மேயர் ராமச்சந்திரன் உறுதியளித்தார்.

இதையடுத்து, உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைக்கிறோம். 15 நாட்களுக்குள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவ-டிக்கை எடுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரத போராட்-டத்தில் ஈடுபடுவோம் என, போராட்ட குழுவினர் கூறினர். மாலை, 6:15 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை குளிர்-பானம் வழங்கி, முடித்து வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us