ADDED : ஏப் 19, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:
கெங்கவல்லி, ஜங்கமசமுத்திரம், புலிக்
கரட்டை சேர்ந்தவர் ராஜா, 41. பால் வியாபாரி. இவரது மனைவி சகுந்தலா, 38. இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். ராஜா அடிக்கடி மதுபானம் அருந்தி வந்தார். இதுகுறித்து கடந்த மார்ச் 29ல், மனைவி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், தோசைக்கரண்டியில் சகுந்தலாவை, ராஜா அடித்தார். அவருக்கு மண்டை உடைந்ததால், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சகுந்தலா புகார்படி, தம்மம்பட்டி போலீசார் விசாரித்து, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரிக்க பரிந்துரைத்தனர். அதன்படி விசாரித்த போலீசார், ராஜாவை நேற்று கைது செய்தனர்.