அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன் தெற்கு அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன் தெற்கு அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : ஏப் 10, 2026 02:41 AM

சேலம்: தேசிய ஜனநாயக கூட்டணியின், சேலம் தெற்கு தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் வினோத், கொண்டலாம்பட்டி மண்-டலம் குகையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, 46, 47வது வார்டுக்கு உட்பட்ட குகை மாரியம்மன் கோவில் பிரதான சாலை, நரசிங்கபுரம் தெரு, சிவன் கோவில் தெரு, மூங்கப்பாடி தெரு கறி மார்க்கெட், லோக செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று, மக்கள் காலில் விழுந்து, துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., தேர்தல் அறிக்கையில் கூறியது போல் குடும்பத்துக்கு, 10,000 ரூபாய், ரேஷன் கார்டுதா-ரர்களுக்கு ஆண்டுக்கு, 3 காஸ் சிலிண்டர், ரேஷன் கடையில் குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்த பகுதியில் உள்ள சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழு-மையாக நிறைவேற்றி தருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணராஜ், எம்.எல்.ஏ., பால-சுப்ரமணியன், சேலம் மாநகர் மாவட்ட செயலர் பாலு, பொரு-ளாளர் வெங்கடாசலம், அம்மா பேரவை இணை செயலர் பாண்-டியன், கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலார் மீனாட்சி சுந்தரம், சார்பு அணி செயலர்கள் ஜமுனா ராணி, சக்கரவர்த்தி, பிரசன்னன், வார்டு செயலர் குமார், சொக்கு, சகாயம், பா.ஜ., மண்டல தலைவர் ராஜசேகர், பொதுச்செயலர்கள் பாலமுரளி, ராஜா, நெச-வாளர் அணி மாவட்ட தலைவர் ராஜூ பழனிசாமி, ஓ.பி.சி., மாவட்ட செயலர் பாலகிருஷ்ணன், கூட்டணி கட்சி நிர்வாகி-களும் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தனர்.
