திட்டங்களை பாரபட்சமின்றி பெற்றுத்தருவேன் கெங்கவல்லி தி.மு.க., வேட்பாளர் ஓட்டு கேட்பு
திட்டங்களை பாரபட்சமின்றி பெற்றுத்தருவேன் கெங்கவல்லி தி.மு.க., வேட்பாளர் ஓட்டு கேட்பு
ADDED : ஏப் 17, 2026 02:00 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் சின்னதுரை, கெங்-கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் வந்து வரவேற்கி-றீர்கள். மீண்டும் நல்லாட்சி தொடர, தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள். உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் முதல்வர், மக்-களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களில், மக்கள் அதிக-ளவில் பயன்பெற்றுள்ளனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையும், அரசின் திட்டங்களையும் கூறி ஓட்டு கேட்டு வருகிறேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் வர-வேற்பு கொடுக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில், இத்தொகு-தியில் சொல்லும் அளவில் எந்த திட்டமும் செய்யவில்லை. கிராம ஊராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகளில் தேவையான அடிப்-படை வசதிகள் செய்துதரப்படும்.
அரசு ஊழியர்கள் முதல், கூலித்தொழிலாளர்கள் வரை, தி.மு.க., ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசை துணிச்சலுடன் எதிர்க்கும் கட்சி தலைவராக, ஸ்டாலின் தான் உள்ளார். தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்ற, வளர்ச்சி நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
தமிழக திட்டங்களை பார்த்து, மற்ற மாநிலங்கள் செயல்படுத்து-கின்றன. மக்கள் தேவை அறிந்து, அனைத்து அடிப்படை வசதி-களும் செய்து தருவேன். 3 முறை அ.தி.மு.க., வெற்றி பெற்றும், தொகுதி மக்களை கண்டுகொள்ளவில்லை. கூட்டணி கட்சியினர் பலமாக உள்ளதோடு, தேர்தல் பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களது பணிகளே, என்னை வெற்றி பெறச்செய்யும். அரசு அறிவிக்கும் திட்டங்களை, தொகுதி மக்களுக்கு பாரபட்சமின்றி பெற்றுத்தரும் எம்.எல்.ஏ.,வாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், தி.மு.க., காங்., வி.சி., தே.மு.தி.க., கொ.ம.தே.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், ஓட்டு கேட்டு பிரசா-ரத்தில் ஈடுபட்டனர்.
