/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தென்னை மரத்தின் நடுவே தகரசீட் குரங்குகள் ஏறுவதை தடுக்க 'ஐடியா'
/
தென்னை மரத்தின் நடுவே தகரசீட் குரங்குகள் ஏறுவதை தடுக்க 'ஐடியா'
தென்னை மரத்தின் நடுவே தகரசீட் குரங்குகள் ஏறுவதை தடுக்க 'ஐடியா'
தென்னை மரத்தின் நடுவே தகரசீட் குரங்குகள் ஏறுவதை தடுக்க 'ஐடியா'
ADDED : ஜூலை 13, 2025 01:29 AM
கெங்கவல்லி தென்னை மரத்தின் நடுவே தகரசீட் அமைத்து, குரங்குகள் ஏறுவதை, விவசாயிகள் தடுத்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம், வாழப்பாடி, கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. ஆனால் பல்வேறு மலைகள், ஊர்களில் சுற்றித்திரிந்த குரங்குகள், உணவு, தண்ணீர் கிடைக்காமல் சமீப காலமாக, சேலம் மாவட்டத்தில் அதிகளவில் தஞ்சமடைந்துள்ளன.
இவை தென்னை மரங்களில் ஏறி குருத்து, இளநீர் போன்றவற்றை பறித்து நாசம் செய்கின்றன. கூட்டமாக திரியும் குரங்குகளை விரட்டும்போது, அவை விவசாயிகளை தாக்குகின்றன. இக்குரங்குகளை பிடித்து மலைப்பகுதியில் விட, வனத்துறைக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால், அவர்கள் கண்டுகொள்வதில்லை.
குறிப்பாக கெங்கவல்லி அருகே கூடமலை, கடம்பூர், 74.கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்கள், மலை அடிவார
பகுதியில் உள்ளன.
அங்குள்ள விவசாயிகள், தென்னை மரங்களில் குரங்கு கள் ஏறாமல் இருக்க, அந்த மரங்களின் நடுவே, 3 முதல், 4 அடி நீளத்தில் தகர சீட் அடித்து, பாதுகாப்பு தடுப்பு அமைத்துள்ளனர்.
இதனால் மரத்தின் மீது ஏறும் குரங்குகள், தகர
சீட் மீது ஏற முடியாமல்
தடுமாறுகின்றன.
இப்படி தடுப்பு அமைத்துள்ள மரங்களில் தேங்காய், இளநீர் வீணாவதில்லை என, கெங்கவல்லி பகுதி
விவசாயிகள் தெரிவித்தனர்.