/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மா.திறனாளி மருத்துவ முகாமில் 78 பேருக்கு அடையாள அட்டை
/
மா.திறனாளி மருத்துவ முகாமில் 78 பேருக்கு அடையாள அட்டை
மா.திறனாளி மருத்துவ முகாமில் 78 பேருக்கு அடையாள அட்டை
மா.திறனாளி மருத்துவ முகாமில் 78 பேருக்கு அடையாள அட்டை
ADDED : நவ 23, 2024 01:27 AM
இடைப்பாடி, நவ. 23-
சேலம் மாவட்டம் முழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் வட்டார வாரியாக நடக்கிறது. இடைப்பாடி வட்டாரத்தில் நேற்று நடந்த முகாமை, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் மகிழ்நன், இடைப்பாடி நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தனர். வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. 510 குழந்தைகள் உள்பட, 690 பேர் பங்கேற்றனர்.
அதில், அடையாள அட்டைகள், 78 பேருக்கும், அடையாள அட்டைகளை புதுப்பித்து, 18 பேருக்கும், பஸ் பாஸ், 23 பேருக்கும், உபகரண உதவிகள், 20 பேருக்கும் வழங்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர் மாதவராஜ்
உள்பட பலர் பங்கேற்றனர்.