/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மாநில அரசிலும் அதிகாரம் இருந்தால் திட்டங்களை செயல்படுத்தி விடலாம்'
/
'மாநில அரசிலும் அதிகாரம் இருந்தால் திட்டங்களை செயல்படுத்தி விடலாம்'
'மாநில அரசிலும் அதிகாரம் இருந்தால் திட்டங்களை செயல்படுத்தி விடலாம்'
'மாநில அரசிலும் அதிகாரம் இருந்தால் திட்டங்களை செயல்படுத்தி விடலாம்'
ADDED : பிப் 04, 2024 09:57 AM
சேலம்: சேலம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஓமலுார், வீரபாண்டி சட்டசபை தொகுதி, பா.ம.க., ஓட்டுச்சாவடி களப்பணியாளர் கலந்தாய்வு கூட்டம், சேலம், இரும்பாலை பிரதான சாலையில் நேற்று நடந்தது. வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்திக் தலைமை வகித்தார். அதில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் வன்னியர் சமூகம் பெரும்பான்மையாக இருந்தும் ஓட்டுகளை பெற முடியவில்லை. அதனால் மக்களை அணுகி ஓட்டுகளை பெற வேண்டியது களப்பணியாளர்களின் பொறுப்பு. மத்திய அரசில் அதிகாரத்தில் இருந்தபோது நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மாநில அரசிலும் அதிகாரம் இருந்தால் திட்டங்களை செயல்படுத்தி விடலாம். வரும் லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களை வெற்றி பெற, தொண்டர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மேச்சேரி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர், அன்புமணி முன்னிலையில், பா.ம.க.,வில் இணைந்தனர். எம்.எல்.ஏ., அருள், மாவட்ட செயலர்கள் ராஜசேகர், நாராயணன், மாவட்ட தலைவர்கள் மாணிக்கம், கதிர்ராசரத்தினம், சிவராமன், லோக்சபா தொகுதி பொறுப்பாளர் குணசேகரன், மாணவர் சங்க மாநில செயலர் விஜயராசா, மாநில துணைத்தலைவர் தேவதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.
அதேபோல் வாழப்பாடி அடுத்த வைத்தியகவுண்டன்புதுாரில், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டுச்சாவடி களப்பணியாளர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் அன்புமணி, 'வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., வெற்றி பெற உழைக்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.