sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

17 மாணவர்களுக்கு ரூ.59 லட்சம் கல்வி கடன் உடனே வழங்கல்

/

17 மாணவர்களுக்கு ரூ.59 லட்சம் கல்வி கடன் உடனே வழங்கல்

17 மாணவர்களுக்கு ரூ.59 லட்சம் கல்வி கடன் உடனே வழங்கல்

17 மாணவர்களுக்கு ரூ.59 லட்சம் கல்வி கடன் உடனே வழங்கல்


ADDED : செப் 14, 2024 03:27 AM

Google News

ADDED : செப் 14, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் கல்வி கடன் தேவைப்படும் அனைத்து மாணவ, மாணவியரும் பயன்பெற, அந்தந்த வட்டார அளவில் கல்வி கடன் மேளா நடத்தப்படுகிறது. சங்ககிரி வட்டார அளவில் மேளா, காகாபாளையத்தில் நேற்று நடந்தது. 8 வங்கிகள், மாணவ, மாணவியர் அளித்த விண்ணப்பங்களை பரிசீலித்து, 17 மாணவ, மாணவியருக்கு உடனே, 59.70 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி கடன் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:மாவட்டத்தில், 2023 - 24ம் ஆண்டில், 5,773 மாணவ, மாணவிய-ருக்கு, 89.01 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், 7,000 மாணவர்களுக்கு, 99 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் ஏற்கனவே கடன் வேண்டி வித்யாலட்சுமி, ஜன்-சமர்த் இணையதளங்களில் விண்ணப்பித்தோர் மட்டுமின்றி புதி-தாக பெற விரும்புபவர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. ஓமலுார் வட்டார மாணவ, மாணவியருக்கு, வரும், 19ல் பத்ம-வாணி மகளிர் கலை கல்லுாரியில் கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. தேவைப்படும் மாணவ, மாணவியர் பயன்படுத்திக்-கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி, சிறு, குறு, நடுத்தர நிறுவ-னங்கள் துறை கடன் ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட முன்-னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us