/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'உர விற்பனையில் முறைகேடு செய்தால் விற்பனைக்கு தடை, உரிமம் ரத்தாகும்'
/
'உர விற்பனையில் முறைகேடு செய்தால் விற்பனைக்கு தடை, உரிமம் ரத்தாகும்'
'உர விற்பனையில் முறைகேடு செய்தால் விற்பனைக்கு தடை, உரிமம் ரத்தாகும்'
'உர விற்பனையில் முறைகேடு செய்தால் விற்பனைக்கு தடை, உரிமம் ரத்தாகும்'
ADDED : டிச 10, 2024 01:58 AM
'உர விற்பனையில் முறைகேடு செய்தால்
விற்பனைக்கு தடை, உரிமம் ரத்தாகும்'
சேலம், டிச. 10-
சேலம் வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பு ரபி பருவத்துக்கான உரம், தேவை அடிப்படையில் அனைத்து தனியார், கூட்டுறவு சங்கங்களில் அனைத்து வகை உரங்களும் போதிய அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் விற்பனை நிலையங்களில் யூரியா, 3,072 மெ.டன், டிஏபி., 624 மெ.டன், பொட்டாஷ், 930 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரங்கள், 3,447 மெ.டன், சூப்பர் பாஸ்பேட், 733 மெ.டன் என மொத்தம், 8,806 மெ.டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டு, வினியோகம் செய்வது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் யூரியா, 1,269 மெ.டன், டிஏபி., 834 மெ.டன், பொட்டாஷ், 853 மெ.டன், காம்ப்ளக்ஸ் உர வகைகள், 1,336 மெ.டன் என, மொத்தம் 4,301 மெ.டன் இருப்பு உள்ளன. தவிர உர கிடங்குகளில், 3,392 மெ.டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமாக, 16,499 மெ.டன் உரங்கள் உள்ளன. எனவே, உரம் தட்டுப்பாடின்றி முறையாக விற்பனை செய்ய, மாவட்ட அளவிலான உர விற்பனை கண்காணிப்புக்குழு திடீர் ஆய்வு நடத்தி வருகின்றன. அதனால், உர கட்டுப்பாடு ஆணை 1985னை மீறி, செயல்படும் உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை தடை மற்றும் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.