/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கல்விக்கு ஊக்கத்தொகையை பயன்படுத்த வேண்டும்'
/
'கல்விக்கு ஊக்கத்தொகையை பயன்படுத்த வேண்டும்'
ADDED : டிச 07, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அம்மாபேட்டை நகரவை மகளிர் மேல்நிலைப்பள்-ளியில், 2024 - 25 கல்வியாண்டுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், 364 மாணவியருக்கு சைக்கிள் வழங்கி பேசியதா-வது:
கல்விகற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்-காக புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம், 1,000 ரூபாய் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஊக்கத்தொகையை கல்வி முன்னேற்றத்துக்கு
பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வேண்டும்,'' என்றார்.இதில் கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி., செல்வகணபதி, முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்பட பலர் பங்கேற்றனர்.