/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோடை விடுமுறையால் வரும் 31 முதல் சேலம் - சென்னை விமான சேவை அதிகரிப்பு
/
கோடை விடுமுறையால் வரும் 31 முதல் சேலம் - சென்னை விமான சேவை அதிகரிப்பு
கோடை விடுமுறையால் வரும் 31 முதல் சேலம் - சென்னை விமான சேவை அதிகரிப்பு
கோடை விடுமுறையால் வரும் 31 முதல் சேலம் - சென்னை விமான சேவை அதிகரிப்பு
ADDED : மார் 04, 2024 07:23 AM
ஓமலுார் : சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், சென்னை பகுதிகளுக்கு, 'அலையன்ஸ் ஏர், இண்டிகோ' நிறுவனங்கள், விமான சேவையை இயக்கிவருகின்றன. இதில் சேலம் - சென்னைக்கு மட்டும், 'உடான்' திட்டம் கிடையாது. ஆனால் தினமும் சென்னையில் புறப்படும் இண்டிகோ விமானம், சேலத்துக்கு மதியம், 12:20க்கு வந்துவிட்டு, 12:45க்கு மீண்டும் சென்னை புறப்படுகிறது. இந்த விமானத்துக்கு வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும், 31 முதல், சேலம் - சென்னை விமான சேவையை அதிகரிக்க, இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சென்னையில் காலை, 10:40க்கு புறப்படும் விமானம், 11:40க்கு சேலம் வரும். இங்கிருந்து மதியம், 12:00க்கு ஹைதராபாத் புறப்படும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு மாலை, 4:25க்கு சேலம் வந்து, 5:00 மணிக்கு சென்னை புறப்படும். இதன்மூலம் மேற்கண்ட நாட்களில் தினமும் இருமுறை சென்னைக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளது.
அதேநேரம் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் சென்னைக்கு ஒருமுறை மட்டும் விமானம் இயக்கப்படும். அதன்படி சென்னையில் காலை, 10:40க்கு புறப்படும் விமானம், 11:40க்கு சேலம் வரும். அங்கிருந்து மதியம், 12:00க்கு சென்னை புறப்படும். இத்தகவலை, 'இண்டிகோ' நிறுவன சேலம் மேலாளர் அக் ஷய்குமார் தெரிவித்தார்.

