/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரத்து அதிகரிப்பு பருப்பு விலை சரிவு
/
வரத்து அதிகரிப்பு பருப்பு விலை சரிவு
ADDED : ஜன 05, 2025 07:34 AM
சேலம்: கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிர-தேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகளவில் பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. அங்கு அறுவடை செய்யப்படும் பருப்புகள், சேலம், செவ்வாய்ப்பேட்டைக்கு விற்-பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பிற மாவட்டங்-களை சேர்ந்தவர்கள் வாங்கிச்செல்கின்றனர். தற்போது பருப்பு வகைகளின் விலைகள் படிப்படியாக குறையத்தொடங்கி உள்-ளது.
இதுகுறித்து பருப்பு மொத்த வியாபாரிகள் கூறியதாவது:வடமாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு வரத்து அதிகமாக உள்-ளது. வழக்கமாக தையில் வரத்து தொடங்கும். தற்போது விளைச்சல் அதிகம் என்பதால் முன்பே அறுவடை தொடங்கி விட்டது. இதனால் துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் விலை, கடந்த மாதத்தை விட, இந்த மாதம் குறைய தொடங்கி-யுள்ளது.
கடந்த மாதம் துவரம் பருப்பு கிலோ, 170 முதல், 190 ரூபாய் வரை விற்றது. இந்த மாதம் தரத்துக்கு ஏற்ப, 30 முதல், 40 ரூபாய் வரை குறைந்து, 150 முதல், 160 ரூபாய்க்கு விற்பனையா-கிறது. அதேபோல் பருப்பு வகைகள் கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. அதன்படி கடலை பருப்பு, 90, பாசிப்பருப்பு, 110, பட்டாணி பருப்பு, 60, உளுந்தம்பருப்பு, 135, பொட்டுக்கடலை, 95, கொள்ளு, 65, வெள்ளை சுண்டல், 150, சிவப்பு சுண்டல், 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகி-றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

