/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.,27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்'
/
'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.,27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்'
'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.,27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்'
'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.,27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்'
ADDED : பிப் 14, 2024 11:18 AM
சேலம்: ''வருவாய்த்துறையின், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் பிப்.,27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் மேற்கொள்ளப்படும்,'' என, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி தெரிவித்தார்.
சேலம், கோட்டை மைதானத்தில் தமிழக வருவாய்த்துறை ஊழியர்கள், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி நிருபர்களிடம் கூறியதாவது:
வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சான்றிதழ்கள் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். லோக்சபா தேர்தல் துவங்கும் முன்பே முழுமையான நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
அரசு உடனடியாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அழைக்காத பட்சத்தில் வரும் பிப்.,22ல் அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
அதற்கும் தமிழக அரசு செவி சாய்க்காத பட்சத்தில் பிப்.,27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

