தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சுதந்திர தின விழா கோலாகலம்

சுதந்திர தின விழா கோலாகலம்

சுதந்திர தின விழா கோலாகலம்


ADDED : ஆக 16, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:நாடு முழுதும், 80வது சுதந்திர தின விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேலம் காந்தி மைதானத்தில், கலெக்டர் இளம்பகவத், காலை, 8:50 மணிக்கு தேசியக்

கொடியை ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மூவர்ண பலுான்களை பறக்கவிட்டு, தேச ஒற்றுமையை வெளிப்படுத்தினார். பின், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், 11 பேருக்கு கதராடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

பின் அரசின் பல்வேறு துறைகள் சார்பில், 16 பயனாளிகளுக்கு, 1.6 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய, 133 போலீசார், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், 400 பேர் என, 533 பேருக்கு நற்சான்றிதழ், 6 மருத்துவர்

களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

மாணவ, மாணவியர், 720 பேர் அடுத்தடுத்து அரங்கேற்றிய, 'எனது இந்தியா' தலைப்பில், மூங்கில் நடனம், பெண்கள் விழிப்புணர்வு நடனம், பரதநாட்டியம், இயற்கை நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், சிவகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹடிமணி, எஸ்.பி., குத்தாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

சேலம் மாநகராட்சியில், மேயர் ராமச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். கமிஷனர் லலித் ஆதித்ய நீலம், துணை மேயர் சாரதாதேவி, மூவர்ண பலுான்களை பறக்கவிட்டனர்.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன், கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். வாள்வீச்சில் மத்திய, மாநில அரசுகள் விருது பெற்ற சங்ககிரி நீதிமன்ற ஊழியர் மெய்யப்பன், 'டெமோ' காட்டினார். மாவட்ட நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி கிருஷ்ணபிரியா, கூடுதல் சார்பு நீதிபதி பிரியா உள்பட பலர் பங்கேற்றனர். சேலம் மத்திய சிறையில், எஸ்.பி., வினோத்குமார், கொடி ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதேபோல் மாவட்டம் முழுதும், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us