ADDED : நவ 01, 2025 01:34 AM
சங்ககிரி, சேலம் மேற்கு மாவட்ட காங்., சார்பில், சங்ககிரியில் முன்னாள்
பிரதமர் இந்திரா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மேற்கு மாவட்ட காங்., கமிட்டி தலைவர் ஜெயக்குமார் தலைமையில், நிர்வாகிகள் சங்ககிரி-பவானி சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்பில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
சங்ககிரி நகர தலைவர் ரவி, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் மணி, மாவட்ட பொதுச் செயலர்கள் நடராஜன், காசிலிங்கம், ராமமூர்த்தி, நிர்வாகிகள் அங்கமுத்து, லோகநாதன், கத்தேரி செங்கோட்டுவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* தாரமங்கலம் நகர காங்., சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராவின், 37ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நகர தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இதில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காந்தி சிலை முன், இந்திராவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாவட்ட இலக்கிய அணி தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, மனோகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

