/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உற்பத்தி திறன் வார விழாவில் தொழில் மானியம் விளக்கம்
/
உற்பத்தி திறன் வார விழாவில் தொழில் மானியம் விளக்கம்
உற்பத்தி திறன் வார விழாவில் தொழில் மானியம் விளக்கம்
உற்பத்தி திறன் வார விழாவில் தொழில் மானியம் விளக்கம்
ADDED : பிப் 20, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலத்தில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உற்பத்தி திறனை அதிகரிக்க செய்வதற்காக புது ஆலோசனைகளை உருவாக்கும்படி, கடந்த, 12 முதல், உற்பத்தி திறன் வார விழா கொண்டாடப்-பட்டது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. சேலம் உற்பத்தி திறன் குழு தலைவர் சாம்சன் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
அதில் இந்தியன் வங்கி சேலம் மண்டல மேலாளர் சுசிலா பார்த்தசாரதி, சிறு, குறு தொழில்களுக்கு வழங்கப்படும் மானியம், மானியம் இல்லா வங்கி கடன்கள் குறித்து பேசினார். சிறு, குறு தொழில் நிறுவன உரிமை-யாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.