கொண்டப்பநாயக்கன்பட்டி பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணி
கொண்டப்பநாயக்கன்பட்டி பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணி
ADDED : மார் 03, 2026 04:34 AM
சேலம்: சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்-பள்ளியில், 23.95 லட்சம் மதிப்பிலான உள்கட்டமைப்பு மேம்-பாடு பணிகளை, அமைச்சர் ராஜேந்திரன் நேற்று திறந்து வைத்தார்.
அதன்பின் அவர் பேசியதாவது:நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 10.30 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளி திறந்தவெளி பகுதியில் நிறுவப்பட்டுள்ள இரும்பு தகடு மேற்கூரை, ரூ.2.33 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் தளம், ரூ. 5.37 லட்சம் மதிப்பில் அமைக்-கப்பட்டுள்ள உணவு அருந்தும் கூடம் ஆகியவை பள்ளி மாணவ,மாணவியர் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்-ளது. மேலும், கலெக்டரின் விருப்ப உரிமை நிதி திட்டத்தின் கீழ், 5.95 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவிர ஒன்றியத்தின் சார்பில், நகர்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி உட்கட்டமைப்பு மேம்பாடு நிதி திட்டத்தின் கீழ், 26.40 லட்ச ரூபாய் மதிப்பில் கொண்டப்பநாயக்கன்பட்டி ஒன்றிய தொடக்கப்-பள்ளிக்கு செல்லும் தார்ச்சாலை புனரமைக்க அடிக்கல் நாட்டப்-பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.
கலெக்டர் பிருந்தாதேவி, செல்வகணபதி எம்.பி., மற்றும் அருள் எம்.எல்.ஏ., பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.
