/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலை நுாலகத்துறை சார்பில் பயிற்சி முகாம் துவக்கம்
/
பெரியார் பல்கலை நுாலகத்துறை சார்பில் பயிற்சி முகாம் துவக்கம்
பெரியார் பல்கலை நுாலகத்துறை சார்பில் பயிற்சி முகாம் துவக்கம்
பெரியார் பல்கலை நுாலகத்துறை சார்பில் பயிற்சி முகாம் துவக்கம்
ADDED : அக் 19, 2024 01:14 AM
பெரியார் பல்கலை நுாலகத்துறை
சார்பில் பயிற்சி முகாம் துவக்கம்
ஓமலுார், அக். 19-
பல்கலை நுாலகத்துறை சார்பில், நுாலகம் மீதான தேசிய குறிக்கோள் பணி குறித்த, ஐந்து நாள் பயிற்சி முகாம் துவங்கியது.
சேலம் பெரியார் பல்கலையில் நுாலகத்துறை மற்றும் ராஜாராம் மோகன்ராய் நுாலக அறக்கட்டளை சார்பில், பொதுநுாலக பணியாளர்களுக்கான நுாலகங்கள் மீதான தேசிய பணியின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நுாலகம் மீதான தேசிய குறிக்கோள் பணி குறித்த, ஐந்து நாள் பயிற்சி நேற்று துவங்கியது. பல்கலை நுாலகர் ஜெயபிரகாஷ் தலைமையில் நேற்று நடந்த பயிற்சியை, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி துவக்கி வைத்தார்.
விழாவில் துணைவேந்தர் ஜெகநாதன் பேசுகையில்,'' நுாலக துறையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. தற்போதுள்ள டிஜிட்டல் முறையில், மக்களுக்கு சேவை புரியும் வகையில், பல தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளது. அவை பற்றிய விளக்கங்களை பயிற்சி மூலம் நீங்கள் பெற முடியும்,'' என்றார்.
முன்னதாக பல்கலையில் உள்ள நுாலகம் மற்றும் அதன் டிஜிட்டல் நுட்ப செயல்பாடுகள், போட்டி தேர்வுக்கான மையம் ஆகியவற்றை, கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார். பயிற்சி முகாமில், சேலம் நகர்புற மற்றும் ஊர்புற நுாலகர்கள் பங்கேற்றனர்.

