/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மயானத்துக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்
/
மயானத்துக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 13, 2025 07:23 AM
மேட்டூர்: மேச்சேரி, கூணான்டியூர் ஊராட்சி, கீரைக்காரனுார் கிராமம், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி கரையில் உள்ளது. அந்த கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு யாரேனும் இறந்தால் அடக்கம் செய்ய, தனி மயானம் இல்லை. அதற்கு பதில், அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில், இறந்தவர்கள் சடலத்தை பல ஆண்டாக புதைக்கின்றனர். அணை நிரம்பினால், கரையோரம் புதைக்கும் அவலம் நீடிக்கிறது. மயானத்துக்கு தனியே இடம் ஒதுக்க, வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 30 ஆண்டுக்கும் மேலாக மக்கள் வலியுறுத்தினர்.
கடந்த மாதம் சேலம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கீரைக்காரனுாரில், 1.97 ெஹக்டேர் அரசு தீர்வை ஏற்பட்ட தரிசு நிலம் என வகைப்பாடு செய்யப்பட்ட இடத்தில், 15 சென்டில் மயானம் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடு நடந்தது. எனினும் இதுவரை மயானத்துக்கு நிலம் ஒதுக்கும் பணி தொடங்கப்படவில்லை. விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள், அரசுக்கு வலியுறுத்தினர்.