/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூடுதல் ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தல்
/
கூடுதல் ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தல்
ADDED : மே 31, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மேட்டூர், பி.என்.பட்டி, கருமலைக்கூடலில் உள்ள ஜவகர் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோருடன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், 'நாங்கள் படிக்கும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, 43 மாணவர்கள் படிக்கிறோம். இரு ஆசிரியர்கள் உள்ளனர். அதில் ஒருவர், ஜூன், 30ல் ஓய்வு பெறுகிறார். ஜூலையில் இருந்து ஓராசிரியர் பள்ளியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.