/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஊடுபயிர் செய்து அதிக லாபம் பெறலாம்'
/
'ஊடுபயிர் செய்து அதிக லாபம் பெறலாம்'
ADDED : மார் 20, 2024 02:15 AM
வீரபாண்டி:வீரபாண்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கிரிஜா அறிக்கை:
ஊடுபயிர்
முறையில் பயிர் சாகுபடி செய்வதால் களைகளை கட்டுப்படுத்துவதோடு
பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கும். மக்காச்சோளம், நிலக்கடலை
பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி செய்தால், 'புரோடினியா'
புழுக்களை கட்டுப்படுத்த முடியும். அதேபோல் சோளம் பயிரிடுவதால்
குருத்து ஈ தண்டு துளைப்பான் ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
கரும்பில்
தக்கை பூண்டு சாகுபடி செய்து தண்டு துளைப்பான் பூச்சியை தடுக்க
முடியும். அதேபோல் வெங்காயம் சாகுபடி செய்து இடைக்கணுப்புழுக்களை
தடுக்கலாம். வெங்காய பயிரின் வரப்பு ஓரங்களில் ஆமணக்கு பயரிட்டால்
வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த முடியும். நெல் பயிர் இடையே
தட்டைப்பயிறு பயிரிட்டு சாறு உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட முடியும்.
நிலக்கடலையில் கலப்பு பயிராக கம்பு பயிரிட்டால் சுருள் பூச்சி,
இலைப்பேன், அந்துப்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்.
இதுபோன்று ஊடுபயிர் சாகுபடி முறையில் பயிர் செய்து விவசாயிகள்
கூடுதல் லாபம் பெற்று பயன் பெறலாம்.

