இடைப்பாடியில் திட்டப்பணி: இ.பி.எஸ்., துவக்கி வைப்பு
இடைப்பாடியில் திட்டப்பணி: இ.பி.எஸ்., துவக்கி வைப்பு
ADDED : செப் 14, 2024 03:28 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி: இடைப்பாடி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 7.83 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள், புது திட்டப்ப-ணிகள் தொடக்க விழா, இடைப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் குப்பம்மாள் தலைமை வகித்தார்.
அதில் அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், ''இடைப்பாடி சட்டசபை தொகு-தியில அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர், சாலை வசதிகள், கல்-லுாரி, மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்,'' என்றார்.
ஒன்றிய செயலர் மாதேஸ், கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் மணி, நகர செயலர் முருகன், நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
