sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இ.எஸ்.ஐ., அமைப்புக்கு சர்வதேச விருது வழங்கல்

/

இ.எஸ்.ஐ., அமைப்புக்கு சர்வதேச விருது வழங்கல்

இ.எஸ்.ஐ., அமைப்புக்கு சர்வதேச விருது வழங்கல்

இ.எஸ்.ஐ., அமைப்புக்கு சர்வதேச விருது வழங்கல்


ADDED : டிச 13, 2024 09:05 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஆசிய, பசிபிக் பிராந்திய சமூக பாதுகாப்பு கூட்-டத்தில், இ.எஸ்.ஐ.,(தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம்) அமைப்புக்கு, 4 விருதுகள் வழங்கப்பட்-டுள்ளன.

இதுகுறித்து, இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல உதவி இயக்குனர் அறிக்கை:சவுதி அரேபி-யாவின் ரியாத்தில், கடந்த டிச., 3ல், சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம் சார்பில், ஆசிய, பசிபிக் பிராந்திய சமூக பாதுகாப்பு கூட்டம் நடந்தது. அதில், 'ஏஏஏ பிளஸ்'(ஆஸ்க் ஆன் அப்பா-யின்மென்ட்) எனும் மொபைல் பயன்பாட்டுக்கு, இ.எஸ்.ஐ., சிறப்பு விருது பெற்றது.

அத்துடன் தொழில்சார் விபத்து, நோய், நிலை-யான முதலீடு, அமைப்பு மீள்தன்மை ஆகியவற்-றுக்கும் தகுதி சான்றிதழ்கள் பெறப்பட்டன. இந்த விருதுகளை, இ.எஸ்.ஐ., தலைமை இயக்குனர் அசோக்குமார் சிங் பெற்றுக்கொண்டார். 'ஏஏஏ பிளஸ்' செயலி, ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., ஆகிய இரண்டிலும் கிடைக்கும். இந்த மொபைல் பயன்-பாடு, காப்பீடு செய்யப்பட்ட நபர்கள், பயனா-ளிகள், ஊழியர்கள், இ.எஸ்.ஐ., ஓய்வூதியதாரர்க-ளுக்கு, சேவை செய்கிறது. இதை ஆங்கிலம், இந்தி உள்பட, 6 பிராந்திய மொழிகள் உள்பட, 8 மொழிகளில்

பயன்படுத்தலாம். சுகாதார சேவைகளை நெறிப்படுத்த, வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, பயனர்கள் ஆன்லைன் சந்திப்புகளை முன்பதிவு செய்யவும், வரிசைகளில் காத்திருக்காமல் மருத்-துவரை சந்திக்கவும், அவர்களின் மின் சுகாதார பதிவுகளை பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. பல்வேறு இ.எஸ்.ஐ., நன்மைகளுக்கான தகுதி நெறிமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்-பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us