/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன் அலைடுஹெல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில் சர்வதேச கருத்தரங்கு
/
விநாயகா மிஷன் அலைடுஹெல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில் சர்வதேச கருத்தரங்கு
விநாயகா மிஷன் அலைடுஹெல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில் சர்வதேச கருத்தரங்கு
விநாயகா மிஷன் அலைடுஹெல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில் சர்வதேச கருத்தரங்கு
ADDED : ஜூலை 28, 2025 02:31 AM

சேலம்: சேலத்தில், விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அ லைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் மயக்க மருந்தியல் பிரிவு சார்பில் சர்வதேச அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடந்தது.
பல்கலைக்கழக வேந்தர் கணேசன் வழிகாட்டுதலில் நடந்த நிகழ்ச்சியில், மயக்க மருந்தியல் பிரிவின் பொறுப்பாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் நாகப்பன் தலைமை தாங்கினார். கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக, ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பல்கலைக்கழக புற்றுநோய் பராமரிப்பு மையத்தின் மயக்க மருந்தியல் பிரிவு ஆலோசகர் வர்கீஸ், டில்லி போத்தீஸ் நினைவு ஆராய்ச்சி மருத்துவமனை ஆலோசகர் குஞ்சன் சர்மா, திருச்சி எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மயக்கவியல் மருத்துவர் கிருபாகர், லண்டன் ராயல் தேசிய எலும்பியல் மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மயக்க மருந்து நிபுணர் ராம்பிரபு கிருஷ்ணன், மகேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மதுரை ஏ.ஆர்.எஸ்., மருத்துவ அமைப்பின் சேவை பொறியாளர் மணிகண்டன், யுவராஜ், நாமக்கல் பிளன்ட்மெட் அமைப்பின் விற்பனை மற்றும் சேவை பொறியாளர் ரூபன் ராஜ் ஆகியோர் மயக்க மருந்தியல் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தனர்.
வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கருத்தரங்கில், 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கல்லுாரி மயக்க மருந்தியல் பொறுப்பாளர் உமா மகேஸ்வரி, உதவி பேராசிரியர்கள் விக்னேஸ்வரா, முத்தமிழ்செல்வன் ஆகியோர் செய்தனர்

