/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாழும் கலை நிறுவனம் சார்பில் இன்று தியான அறிமுக பயிற்சி
/
வாழும் கலை நிறுவனம் சார்பில் இன்று தியான அறிமுக பயிற்சி
வாழும் கலை நிறுவனம் சார்பில் இன்று தியான அறிமுக பயிற்சி
வாழும் கலை நிறுவனம் சார்பில் இன்று தியான அறிமுக பயிற்சி
ADDED : ஆக 15, 2024 07:16 AM
சேலம்: பாபநாசத்தில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தவர் ரவிசங்கர்.
சீடர்களால், 'ஸ்ரீஸ்ரீ' என அழைக்கப்படும் இவர், 'வாழும் கலை' நிறுவனத்தை தோற்றுவித்தவர். 'சுதர்ஷன் க்ரியா' என்பது, வாழும் கலை நிறுவன பயிற்சிகளின் ஒரு முக்கிய அங்கம். இது உடலில் ஆற்றலை புகுத்தி உடல், மனம், உணர்வுகளின் இயற்கையான தாள லயங்களை சமன் செய்யக்கூடியது. இதன் பலன்கள் குறித்து பல்வேறு தனி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைத்தவிர வாழும் கலை நிறுவனம் தியானம், குழு சார்ந்த பயிற்சிகளை அளிக்கிறது. இப்பயிற்சியை ஒரு நாள் அறிமுக வகுப்பாக, இன்று மாலை, 5:00 மணிக்கு, கந்தம்பட்டி குருக்கள் பள்ளி எதிரே உள்ள வணிக வளாகத்தில் நடக்கிறது. அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கலாம் என, சங்கரபாண்டியன், செல்வராசு கேட்டுக்கொண்டுள்ளனர்.