/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி கருணாநிதி சிலை வைப்பால் விசாரணை
/
அனுமதியின்றி கருணாநிதி சிலை வைப்பால் விசாரணை
ADDED : ஜூலை 04, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி அடுத்த குறிச்சி பஸ் ஸ்டாப் பகுதியில், அருநுாற்றுமலை நெடுஞ்சாலை அருகே, காமராஜர், எம்.ஜி.ஆர்., அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் உள்ளன. அதன் அருகே இருந்த, தி.மு.க., கொடி கம்பம், சமீபத்தில் அகற்றப்பட்டது.
இந்நிலையில் அங்கு, நேற்று முன்தினம் இரவோடு இரவாக, முன்னாள் முதல்வர், தி.மு.க.,வின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு, 6 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து, வாழப்பாடி வருவாய்த்துறையினர், வாழப்பாடி போலீசார், அப்பகுதிக்கு சென்று, அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.