ADDED : நவ 03, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், நவ. 3-
காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையில் உள்ள அரசு தென்னை பண்ணை வேளாண் அலுவலர் ஸ்ரீவித்யா அறிக்கை:
அரசு தென்னை நாற்று பண்ணையில் பாரம்பரிய ரகமான அரசம்பட்டி, வீரிய ரகமான நெட்டை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 2024 - 25ம் நிதி ஆண்டில் இதுவரை, 63,000 கன்றுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தவிர, 53,500 நெட்டை ரக கன்றுகள், 12,500 நெட்டை குட்டை ரக கன்றுகள், விற்பனைக்கு தயாராக உள்ளன.
நெட்டை ரக கன்று தலா, 65 ரூபாய், நெட்டை குட்டை ரகம் தலா, 125 ரூபாய்க்கு வினியோகிக்கப்படுகிறது. தேவைப்படுவோர், 93841 25705 என்ற எண்ணில் அலுவகக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.