/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி கொங்கு பாலிடெக்னிக்கில் சேர அழைப்பு
/
தி கொங்கு பாலிடெக்னிக்கில் சேர அழைப்பு
ADDED : மே 19, 2024 02:39 AM
சேலம்: மல்லுார், தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி தலைவர் ராமலிங்கம் அறிக்கை:
தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, 3ம் ஆண்டு இறுதி தேர்வுக்கு முன், டி.வி.எஸ்., சுந்தரம் கிளைடன், வீல்ஸ் இண்டியா, பிரேக்ஸ் இண்டியா, டர்போ எனர்ஜி, அசோக் லேலண்ட், டெக்ஸ்மோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.
அதனால், 10, பிளஸ் 2 படித்த மாணவர்கள், டிப்ளமோ படிப்பை தேர்வு செய்து அதன் மூலம் நல்ல நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் பணியில் இருந்துகொண்டே, மேற்படிப்பு படித்தும் வாழ்க்கையில் முன்னேறலாம். மேலும் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் பகுதி நேர பாடப்பிரிவுகளாக மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் நடத்தப்படுகிறது. வேலையில் இருப்பவர்கள், 10ம் வகுப்பு படித்திருந்தால், பகுதி நேர பாடப்பிரிவில் படித்து பணியில் உயர் பதவி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

