/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று மா.திறனாளி தினம் 23 போட்டிக்கு அழைப்பு
/
இன்று மா.திறனாளி தினம் 23 போட்டிக்கு அழைப்பு
ADDED : டிச 03, 2025 07:56 AM
சேலம் டிச., 3ல், அனைத்து நாடுகள் மாற்றுத்தினாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு சேலம் காந்தி மைதானத்தில், இன்று காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, மாற்றுத்திறனாளிகளுக்கு, 0 - 10 வயது; 11 - 18; 18 வயதுக்கு மேல் என, 3 பிரிவாக போட்டி, தனித்தனியே நடக்கிறது. நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், காய்கறி சேகரித்தல், 100 மீ., 400 மீ., ஓட்டம் உள்பட, 23 வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
விருப்பம், தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். வரும், 10ல் நடக்கும் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு சேலம் கலெக்டர் அலுவலகம், 3 நாட்களுக்கு வண்ண மின்னொளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி தெரிவித்தார். இதுதொடர்பாக, 99659 - 91238 என்ற எண்ணில் பேசலாம்.

