/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தபால் தலை சேகரிப்பு வினாடி - வினாவுக்கு அழைப்பு
/
தபால் தலை சேகரிப்பு வினாடி - வினாவுக்கு அழைப்பு
ADDED : ஆக 17, 2025 02:28 AM
சேலம், சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் முனிராஜ் அறிக்கை:அஞ்சல் துறை, தீன தயாள் ஸ்பார்ஸ் யோஜனா எனும், தபால் தலை சேகரிப்பு உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், 6 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தபால் தலை சேகரிப்பு வினாடி - வினா போட்டி நடக்க உள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள், 6,000 ரூபாய் பரிசு பெறலாம். மாணவர்கள், தபால் தலை சேகரிப்பு கிளப்பில் உறுப்பினராகவோ, தபால் தலை சேகரிப்பு வைப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை, tamilnadupost.cept.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 'தி போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மேற்கு மண்டலம், கோவை - 641030' எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டி செப்., 20ல் நடக்க உள்ளது. விபரம் பெற, 0427 -2253050, 2266370 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.